நடையழகு

நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் 
திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, 
அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
யாக்கோபு 1:22

உலகிலே காலகாலமாக திருவசனங்களும்,
 கிறிஸ்துவின் போதனைகளும், எங்கும் எதிரொலிக்கிறது; 
நாமும் தொடர்ந்து கேட்கிறோம்; திரும்ப திரும்ப கேட்கிறோம். 
கேட்ட காரியங்களை கற்று கைக்கொள்ளாமல் போவோமாகில் 
நீரற்ற கிணற்றைபோலவும், மனமற்ற மலரைப்போலவுமே.

ஆண்டவரின் அடியவராக (சீடராக) இருப்பது தான் நமது அடிப்படை அழைப்பு. 
தேவவசனத்தை கேட்டு அதன்படி நடக்க தீர்மானித்தால்
 நமது குணம் மாறும், சிந்தை சீர்படும்.
 இறைவார்த்தையை கேட்டு சிறுசிறு விஷயத்தில் 
நம்மை சரிசெய்வதே நம்மில் மிகப்பெரிய மாறுதலை கொண்டுவரும்.

புகைப்பட சான்று : countryliving.com

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED