அனுதின அலங்காரம்

அவர்கள் தங்கள் முகத்தையல்ல, 
தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்;
 தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து
 எங்களை இரட்சியும் என்கிறார்கள்.
எரேமியா 2:27

சந்தோஷமாக வாழும் பொழுது நமக்கு கடவுள் தேவைப்படுவதில்லை, 
கஷ்டம் என்றால் தான் லபோதிபோ என்று கதறுகிறோம். 
நம் வாழ்வின் I.C.U. வரை சென்றபின் தான், I SEE YOU LORD என அலறுகிறோம்.
 அதுவரை கடவுளுக்கு முக்கியத்துவம் அல்ல, முதுகு தான் காட்டுகிறோம்.


"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன்" 
என்று ஆண்டவர் சொன்னது ஆணித்தரமான உண்மை தான். 
அதற்காக ஆபத்துக்காலத்தில் மட்டுமே கூப்பிடுவது அநியாயம்.
 அனுதினமும் அலங்காரத்தோடு, 
நமது முகம் எப்பொழுதும் ஆண்டவரையே நோக்கி இருக்கட்டும்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED