நிறைவான உணவு

கர்த்தாவே, உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே 
அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் 
எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; 
எரேமியா 15:16

அனுதினமும் ஆயிரம் வார்த்தைகளை கேட்கிறோம்; 
ஆனாலும், அவையேதும் நம்மை அணுவும் அசைப்பதில்லையே. 
இறைவார்த்தைகள் காதோடு வந்து காற்றில் கடந்துசென்று விட்டால்,
 நமக்கு கடுகளவும் பயனில்லை. இறைவார்த்தைகள் ஒவ்வொன்றும் 
நம் மனதோடு பேசும், பேசவேண்டும்!

மனதோடு பேசும் வார்த்தைகள் மட்டுமே மனமாற்றத்தைக் கொடுக்கும். 
இறைவார்த்தைகள் எல்லாம் நம்மில் விதைபோல
 விழுந்தால் தான் விருட்சமாகும். இறைவார்த்தை மிகவும் நிறைவானது. 
நிறைவானது நம்மில் வரும்பொழுது தான், நம் குறைவானது எல்லாம் ஒழிந்துபோகும்.

P.C.: Universal Life Church

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED