இது நமக்கு அழகா?

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, 
உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. 
நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை.. . 
எரேமியா 15 : 16

தேவையில்லாத இடத்திற்கு செல்வதை தவிர்த்தாலே விமர்சனங்களும்,விபரீதங்களும் தவிர்க்கப்படும். ஆகாத இடத்தை நாடும் 
பொழுது தான் நாம் வதைக்கப்படுகிறோம், வறுக்கப்படுகிறோம். 
எனவே, கேலிக்கூட்டத்தை நாடிச்செல்வது நம் கண்ணை 
நாமே குத்திக்கொள்வதைப்போன்றது.

நண்பர்கள் அவசியம்!
 நண்பர்களே, அன்பர்களாகவும், ஐக்கியமாகவும் ஆவார்கள். 
ஆனால், அடுத்தவரை கேலிசெய்து, புண்னாக்கி பூரிப்படைவோர் 
மத்தியில் நாம் சும்மா உட்காருவதும் அருவருப்பு. 
கடந்தையாக பிறரை காயப்படுத்துவோருக்கு உடந்தையாவது 
இறைமக்களுக்கு துளியும் அழகல்லவே!

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED