உதவாக்கரை !

தண்ணீர் பெருக்கு அதிகமாகும் முக்கிய நேரத்திலும்
பாதிப்பு ஏற்படுத்தும் பயங்கர நேரத்திலும் - அதை
தாக்குபிடிக்கவோ, தடுத்துநிறுத்தவோ இயலாதெனில்
கடற்கரையோ, கம்மாக்கரையோ,. . . . எந்தக்கரையும் 
முழுக்க முழுக்க "உதவாக்கரை" தான்.

புகைப்படச்சான்று : தினத்தந்தி 

ரோட்டோரம் ஒருத்தன் திருடன்கிட்ட மாட்டிக்கிட்டு,
அடிபட்டு, காயப்பட்டு, ஒடம்புல ஒட்டுத்துணியில்லாம,
குத்துயிரும், கொலையுயிருமா துடிச்சிகிட்டு இருக்க. . .
அந்த வழியா வந்த குருவானவரும், கோயில்குட்டியாரும்
கோயிலுக்குப்போற அவசரத்துல 'துடிச்சவன கண்டுக்கல'...


ஆனால், சாதாரண சாமானியன் அந்த வழியாக வந்தான்.
அவன் தான் சமாரியன். உண்மையிலே நல்ல சமாரியன்.
துடிதுடித்தவனை பார்த்து இவன் துடிதுடித்து போனான்.
நல்ல சமாரியனே, காயப்பட்ட மனிதனுக்கு கட்டு கட்டுகிறான்,
பராமரிக்கிறான், பணம் கொடுக்கிறான், பாதுகாக்க வழிவகை செய்கிறான்.

புகைப்படச்சான்று : Welcome Wildlife

'ஒதுக்கப்பட்ட உதவாக்கரை' என சமூகத்தால் தாழ்த்தப்பட்டு
தூக்கி எறியப்பட்ட 'ஒருத்தனே', . . . . .
இல்லை, இல்லை "ஒருத்தரே"
ஏனெனில், அவர் தான் உயர்ந்தவர் 
உள்ளத்தால் மிக மிக உயர்ந்தவர்.
ஆனால், சமூகத்தின் பார்வையில் இவர் ஒரு உதவாக்கரை
இந்த உதவாக்"கரை"க்கு காரணம், உதவாக்"கரையான்"
ஆம், ஒன்றுக்கும் உதவாத சாதி(வெறி)உணர்வு எனும் கரையான்.

புகைப்படச்சான்று : Google Images

இந்த கரையானால், பிறரால் உதவாக்கரையான இந்த உத்தமன்
உன்னதரின் பார்வையில் உயர்ந்தவனாக கருதப்பட்டான்.

குருவானவரும், கோவில்பிள்ளையும்
சாமியைப் பார்க்க கோவிலுக்கு ஓடினார்கள்.
தேவையில் இருப்பவனுக்கு உதவின இவனையோ
நம் இயேசு சாமி, பிறரிலும் உயர்ந்தவனாகவே பார்த்தார்,
"ஒதுக்கப்பட்ட உதவாக்கரை"யை உயர்த்தி அழகுபார்த்தார்,
'உண்மையை உயர்த்தினார், உண்மையாகவே உயர்த்தினார்,
நம் எல்லாருக்கும் நல்லதொரு உதாரணமாக உயர்த்தினார்'.

இப்படி "உதவாக்கரை" சம்பவம் ஆயிரமுண்டு,
அதிலே அடுக்கவேண்டிய அடுத்தஒன்று
பணமில்லா எவரையும் இச்சமூகம்
உதவாக்கரையாகத் தான் பார்க்கும்.

பணம் படைத்த செல்வேந்திரன் ஒருத்தன்
பகட்டு உடையணிந்து பந்தாவாக வாழ்ந்து வந்தான்-அவனது 
பங்களா வீட்டு வாசலருகே பரிதாபமாக வாழ்ந்த
லாசரு எனும் பேருள்ள தரித்திரனும் எல்லோராலும்
உதவாக்கரையாக தான் பார்க்கப்பட்டான் - லாசரு
பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டான் - சோற்று
பருக்கைக்காக படுஏக்கத்தோடு ஏங்கிநின்றான். . .
பருக்கைக்கு ஏங்கினவனிடம் நாய்கள் வந்து
பருக்களை நக்கியது, அவன் முகப்பருக்களை நக்கியது.
பதிலுக்கு அவனால் விரட்டக்கூட வழியில்லை,
தெருநாய்கிட்ட சண்டைபோடவும் சக்தியில்லை.

புகைப்படச்சான்று : Google Images

இது நடக்குறது எல்லாம் பணக்காரத் துரை வீட்டு வாசலிலே தான்
அவன் ஒரு செல்வ சீமான், கோடீஸ்வரக் கோமான். . .
மத்தவனைப் பத்தி கவலைப்படாத புத்தியற்றப் பூமான்.

இருவரையும் மரணம் கூட்டிச்சென்றது - இப்பூவில் 
லாசருக்கு படியில கூட நிலையான இடமில்லை
சொர்க்கத்திலோ அவனுக்கு மடியில் இடம் கிடைத்தது
"எல்லா விசுவாசிகளின் தகப்பனாம் ஆபிரகாம் மடியில்;"
பணம் படைத்த செல்வேந்திரனோ எரியும் நரகத்தில் !

"ஒருவன் எரியும் அக்கினியில் தவிக்கிறான்,
மற்றொருவன் அப்பன் மடியில் அமர்கிறான்."

சமூகமே லாசருவை உதவாக்கரையாகப் பார்த்தது - ஆனால்
பசிச்சவனுக்கு சோறுகொடுக்காத, மற்றவனை துளியும் நினைக்காத
அந்த பணக்கார துரைதான் "உண்மையான உதவாக்கரை".
சமூகத்தின் பார்வை வேறு, சர்வலோகாதிபதியின் பார்வை வேறு !


இதெல்லாம் எங்க உருப்படப்போகுது, எப்படி கரை சேரப்போகுது. . . .
இப்படி ஏளனமாக எண்ணப்படலாம், உதவாததாக உதறப்படலாம் . . .
எதற்கும் உதவாத கரை, சில வேளை ஒளிரும் கலங்கரையாகும்.

பிறர் நம்மைப் பற்றி எப்படியும் பேசலாம் ;
புகழ்ந்தும் தள்ளலாம் ;
புழுதி வாரியும் தூற்றலாம் ;
நம்மிடம் உதவியும் கேட்கலாம் ;
உதவாக்கரை என எண்ணி ஒதுக்கியும் வைக்கலாம்.

யோசேப்பு எனும் நம் அண்ணனை
செல்லமகனாக, சொப்பனக்காரனாக, 
அடிமையாக, ஆகச்சிறந்தவனாக, 
ஆணழகனாக, பாலியல் குற்றவாளியாக, . . .
இப்படி பலரும் பலவிதமாக பார்த்தனர்.
ஆண்டவரோ, அவரை நாடாளும் பிரதம மந்திரியாக பார்த்தார்.
பலரால் உதவாகரையாகப் பார்க்கப்பட்டவர் - அந்த
நாடே இருட்டில் மூழ்கி தத்தளித்த காலத்தில்
நாட்டிற்கே வழிகாட்டும், கலங்கரை ஒளி விளக்கானார்.

புகைப்படச்சான்று : Google Images

நம்ம இப்போ இதுல எந்த கரைன்னு தெரியலியே,
கலங்கரையா? உதவாக்கரையா? அக்கரையா? இக்கரையா?
இல்ல, கரையே இல்லாம தத்தளிக்கோமா. . . .?
ஆழமாக யோசித்து பார்ப்போம்!

எது எப்படியா இருந்தாலும்,
எந்த நிலையில நாம இருந்தாலும்
நிலையான கடவுளிடம் வருவதே
நிரந்தரமாக நித்திய கரைசேருவதற்கான
சத்தியத்தின் ஒரே வழியும், சரியான வாய்ப்பும்!

புகைப்படச்சான்று : Google Images

அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும்பொழுது
பொட்டல்காடும் பூங்காவனமாகும், வறண்டநிலமும் வயல்வெளியாகும்,
உதவாகரைகளும், உதவும் கலங்கரை விளக்குகளாகும்
சகலமும் நன்மையாகும், அவரது வழிநடத்துதல் நேர்த்தியாகும்.

உண்மையாக யோசிப்போம், உறுதியான முடிவெடுப்போம்,
உண்மை வழி இயேசு ஒருவரே என கண்டுகொள்வோம்,
கிறிஸ்து இயேசுவையேப் பற்றிக்கொள்வோம்,
நித்தமும் அவருடன் அவர்காட்டும் வழிநடப்போம்.



("உதவாக்கரை!" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த வரிகள், 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' மூலம் நடத்தப்படும் குறுநேர மெய்நிகர் வாராந்திர கூடுகைக்காக எழுதப்பட்டு, 06.10.2020ல் அக்கூடுகையில் வாசிக்கப்பட்டது. யாவரையும் ஊக்கப்படுத்துவதற்காக 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' எடுக்கும் இந்த முயற்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.)

Comments

  1. .. அருமையான வரிகள்.. இ‌ன்னு‌ம் பல சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு வணக்கம் மாப்ள.
      உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி மாப்ள.

      Delete
  2. சிறந்த படைப்பு.
    வாழ்த்துக்கள். . .

    ReplyDelete
    Replies
    1. வாசித்தமைக்கு நன்றி.
      வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  3. Replies
    1. Very Kind of You.
      Thank you for your kind words.

      God Bless. . .

      Delete
  4. Replies
    1. Praise God.
      Thank you for your positive words.

      Blessings Upon U

      Delete
  5. இந்த உதவாக்கரை நிச்சயம் பலருக்கு உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.

    சிறந்த படைப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வாசித்தமைக்கு நன்றி.
      உங்களது வார்த்தைகளுக்கும் நன்றி.
      உங்களது வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      இறைநாமம் மகிமையடையட்டும்.

      Delete
  6. Replies
    1. Very Kind of You.
      Thank you for your kind words.

      Blessings Upon U Bro.

      Delete
  7. Great spiritual thought!!!!
    Kindly use this God given talent of yours continuously for strengthening many!!!!

    ReplyDelete
    Replies
    1. Very kind of you Ziegen.
      Thank you for your kindness.
      Blessings Upon U

      Delete
  8. ஆர்வமிக்க அன்பர்கள்
    ஐக்கியம்
    உதவாக்கரை
    உன்னத வாக்கியங்கள்
    வாசிக்க
    வாரம் 24 ஆயிற்று.
    ஆயினும்
    ஆண்டவர் அருளால்
    உதவாக் கரை யாய்
    உறைந்த என்னை
    உதவும் கரை யாய்
    உருமாற
    உந்துதல் அளித்தது
    உன்னத வாக்கியங்கள்.
    உயரிய நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வார்த்தைகளுக்கு வாழ்த்துக்கள் !
      இயேசுவுக்கே புகழ் !!
      இறையாசீர் தாமே, தொடர்ந்து உங்களை நல்வழியில் நடத்துவதாக!!

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED