சுவாமி தரிசனம்

அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; 
அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ 
என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 22:16

ஆண்டவர் சிறியவர்களையும் எளியவர்களையும் என்றும் ஆதரிக்கிறார்,
உதவுகிறார், நடத்துகிறார், நன்மை செய்கிறார். அவர் என்றுமே
 சிறுமை மற்றும் எளிமையுமானவர்களின் மேல் 
 உள்ளத்தில் அதீத கரிசனையுள்ளவராகாவே இருக்கிறார், 
உள்ளபடியே தம்மை வெளிப்படுத்துகிறார்.

சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுள்ளவர்களாகவே நாம் 
இருக்கவேண்டும் என்பதற்கு அவரே மாதிரி; அதுவே, அவரது விருப்பமும். 
சிறியோருக்கு நாம் செய்வது, சிலுவைநாதருக்கே செய்வதாகும். 
எனவே, தேவையுள்ளோரைத் தேடுவோம், உதவுவோம், 
ஆண்டவரை அறிந்திடுவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED