தொட்டில் பழக்கம்

நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன்,
 நீ கேளேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் 
நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.
எரேமியா 22:21

அப்பா சொல்லுக்கு எதிர்மறையாக நடப்பதே பிள்ளைகளின் பழக்கம். 
வெளிவாழ்விலும் எச்சில் துப்பாதீர் என்ற சுவற்றில் துப்பிப்பார்ப்பது வழக்கம். 
இது அறியாமையா? இல்லை! ஏனெனில், 'அபாயம்' என்றுள்ள
 உயர் அழுத்த மின்சாரக்கம்பியை தொட்டுப்பார்ப்போமா?

"நல்லது கெட்டது நமக்கு நல்லா தெரியும்". 
ஆனாலும், நல்லதை மட்டும் கடைபிடிக்க மறுத்து, மனம் அடம்பிடிக்கிறது. 
திருமறையில் ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காக அதிகாரங்கள் வாசிப்பதை விட
 ஒரே ஒரு திருவசனத்தின்படியாவது நடப்பது தான் உயரியது. 
இதுவே, ஆண்டவரின் சத்தத்திற்கு செவிசாய்ப்பது!

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED