உயிரினும் மேலான உறுதி

. . தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள 
ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், 
அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்;
தானியேல் 3:15

"வாத்தியங்கள் முழங்கும்போது, அரசன் உண்டாக்கியப் 
பொற்சிலையை தெய்வமாக வணங்க வேண்டும்" 
எனும் இந்த கட்டளையை எதிர்த்தால், எரிநெருப்பில் இரையாவோம்
 என அறிந்தும் துடிப்பான மூன்று இளைஞர்கள்  
( சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ) உறுதியாய் மறுத்து, 
ஆண்டவரைப் பற்றினர்; அக்கினியிலும் காப்பாற்றப்பட்டனர்.

நமது வாழ்வின் உண்மைக்கும், 
உறுதியான நிலைப்பாட்டிற்கும் சோதனைகள் வரும். 
அப்பொழுதெல்லாம், அக்கினியின் முன்னும் உறுதியில் கொஞ்சமும் தளராத, 
தரம்குறையாத வாலிபர் மூவருமே நம் கண்முன் நிற்கவேண்டும். 
உண்மையின் உறுதியை ஆண்டவர் என்றும் கனப்படுத்துவார்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED