காலையில் வாங்கும் பாக்கெட் பால் துவங்கி
இரவில் கொளுத்தும் கொசுபத்தி வரை
உலகம் சுழலும் ஒவ்வொரு நொடியையும்
பணம் என்னும் பம்பரக்கயிறு தான் சுழற்றுகிறதாக
பகிரங்கமாக பறைசாற்றலாம்.!
நிதர்சனமாய் நிலைநாட்டப்படுவது,
பணத்தை உண்ணவும் முடியாது;
பணமின்றி உண்ணவும் முடியாது.
பாதி UMPIRES தீர்ப்பையே
பணம் தான் தீர்மானிக்கிறது.
P.C. : Habitat For Humanity UK
கல்வியும் காசாகிறது;
கழிவுகளும் காசாகிறது.
மருத்துவம் காசாகிறது;
மணங்களும் காசாகிறது.
காசு காற்றலையாய் வீசுகிறது;
காசு தான் இங்கு சுவாசமாகிறது.
அப்போ, காசு இல்லனா கஷ்டம் தானோ?
ஆமா, காசு இல்லனா கஷ்டம் தான்!
பணம் தேவை தான் - ஆனால்
பண ஆசை தேவையற்றது.
பண ஆசை படைத்த ஒருவர்,
அடித்துப் பிடுங்கி சேர்த்த பணம்;
அடிமை ரத்தத்தில் விளைந்த பணம்;
பிறர் வயித்தில் அடித்து வார்த்த பணம்;
நாயாய் பேயாய் சேர்த்த பணம்;
கழுத்தை நெரித்து கறந்த பணம்;
துரத்தி துரத்தி திரட்டிய பணம்;
மிரட்டி உருட்டி குவித்த பணம்!
பணத்தின் மேலுள்ள தீராத தாகம்
காலப்போக்கி லும் தனியாத மோகம்!
யாரிந்த பணப்பித்தன், பணம்பறிக்கும் ஜித்தன் ?
P.C. : Medium
ஆள்பலமும், அதிகாரமும் அதீதம் பெற்ற
வரிவசூல் செய்யும் "வசூல்ராஜா"
"எரிகோ சகேயு" எனும் LOCAL தாதா.
எரிகோ ஊர் வழியா, அன்பின் உருவம்
கருணாமூர்த்தி, காருண்யக்கடல்
இயேசு நாதர் வாராருன்னு
தகவல் சொல்லுறாங்க நம்ம சகேயுவுக்கு !
(எரிகோ நகர் முழுக்க நம்ம சகேயு தானே கெத்து.)
இயேசு நாதர் எப்போ வருவாரோ?
எம்பெருமான் எப்படியிருப்பாரோ? ன்னு
ஆர்வத்துல ஊரே கூடி காத்துக்கிடக்குது.
ஊருக்கே ஆர்வம், சகேயுவுக்கு இருக்காதா பின்ன?
கூட்டமுன்னா கூட்டம், நம்ம ஊரு திருவிழா மாதிரி கூட்டம்.
கூட்டம் கூடிட்டா எப்படி பாக்குறது? - ஏன்னா,
சகேயு அண்ணன் உருவ உயரம் கொஞ்சம் குறைவு.
அருள்நாதர் இயேசுவைப் பார்க்க ஆர்வமும், ஏக்கமும்
ஏங்கினான் - காட்டத்தி மரத்தின் மேலே ஏறினான்.
ஊருக்குள்ளே இயேசு நாதர் வந்துவிட்டார்,
காத்திருந்த கூட்டமெல்லாம் காட்சி பெற்றது.
நம்ம சகேயு அண்ணாச்சி மேல தான் கண்ணுப்பட்டது.
ஆம், உலகத்துக்கே ஒளியாக வந்தவரின் பார்வை - மரத்தின்
உயரத்தில் இருந்து பார்த்த சகேயு மேல் பட்டது.
"சகேயு, இறங்கி வா!
இன்னைக்கு உன் வீட்ல தான்
தங்கணும், சீக்கிரம் வா!"
கயவன் வீட்டில் கடவுளா?
இவர் உண்மையிலே கடவுளா?
ஊரில் உள்ள குழந்தைகளுக்கும் தெரியும்
சகேயு எப்படிப்பட்டவர் என்று! - இவரை
ஆண்டவர் இயேசு அழைத்த உடனே
வியப்பில் விழிபிதுங்கினர் !
நல்லவனை தேடிப்போகாம
நாசக்காரன் வீட்டில தங்கப்போறாரே !
மனம் குமுறல்களை அடைகாக்க முடியாது
முறுமுறுத்து வெடித்து தள்ளினர்.
இயேசு சுவாமி வார்த்தையைக் கேட்ட சகேயு
அதிர்ச்சியில் உறைந்தான், ஆச்சரியத்தில் அமிழ்ந்தான்
மறைக்கும் என்று மரத்தில் ஏறினால்
மன்னவரே மனங்குளிர அழைத்தாரே!
மொட்டுவிரித்த மலராய் மனமலர்ந்து
கடவுளின் அழைப்பில் மனமகிழ்ந்து
சரசரவென இறங்கி வந்தான்;
சந்தோஷத்தில் ஓடிவந்தான்.
கொஞ்ச தூரம், இயேசுவுடன் நடந்துவந்தான்
அவ்வளவுதான். . . . . . . . . . . !
"சாமி, என் சொத்துல பாதியை ஏழைகளுக்கு கொடுத்துடுறேன்
நான் அநியாயமாய் சேர்த்த பணத்தை உரியவங்ககிட்ட
திருப்பி நாலு மடங்கு அளந்து கொடுத்துறேன்." என்றார் சகேயு.
P.C. : Google Images
கடவுள் ஒண்ணுமே சொல்லலியே சார்.
வீட்டுக்கு வரேன்னு சொன்னாரு,
வீட்டில தங்கணும்னு சொன்னாரு,
கொஞ்ச தூரம் தானுங்க கூட நடந்தீங்க,
வீட்டை தவிர எல்லாத்தையும் வித்துட்டீங்களே!
நாலு அடி நடந்துருப்பாரா?
நாலுமடங்கு திருப்பி தரேன்னு சொல்லிட்டாரே
நம்ம வட்டிக்கார அண்ணாச்சி!
கடவுளுடன் நடக்கும் ஒவ்வொரு அடியும்
நம் வாழ்வின் உயர்வுக்கான படிகள்.
சகேயுவுக்கு சந்தோசம் என்னனா. . .
மனைதேடி மாணிக்கமே வந்த பிறகு
மண்ணாப்போற பணம் மண்ணுக்கு சமம் தானே!
அத வித்தா என்ன? வீசி எறிஞ்சா என்ன?
நல்வாழ்வு வாழ முடிவு எடுத்த சகேயுவுக்கு
இரட்சிப்பு எனும் பொன்முடி சூட்டி அழகுபார்த்தார்
அருள்நாதர் இயேசு கிறிஸ்து.!
இல்லத்திற்கு வந்தார், உள்ளத்திலும் வந்தார்.
சகேயு எனும் ஒரு மனிதனின் மனமாற்றத்தால்
அந்த வீடு முழுக்க இறைவனால் மீட்கப்பட்டது.
தப்புபண்ணுற ஒருத்தன் திருந்தும் போது
எல்லாரையும் விட அதிகம் சந்தோசப்படுறது
அன்பு தெய்வம் இயேசுகிறிஸ்து தான்.
சகேயு கடவுளைப்பார்த்தார்
CUURENCY எல்லாம் களிமண்ணாய் தெரிந்தது.
களிமண்ணாகிய சகேயுவின் உள்ளத்தை கடவுள் பார்த்தார்
அவன் கூடாரத்துக்கே மீட்பு அளித்து மனமகிழ்ந்தார்.
இங்க ஒருத்தர் இப்படியிருக்காரா?
இன்னொருத்தர் கதையை பார்த்தா
இதைவிட பிரமாதம்!
சமாரியா ஊர்ல, மாயவித்தை பண்ணுற
சீமோன் எனும் வித்தைக்காரன் இருந்தான்.
சுயபெருமையும், தற்புகழ்ச்சியும் அவனுக்கு ஒட்டுண்ணிகள்.
தன்னை பெருமையாக காட்டிக்கொள்ள
மாயம் பண்ணியும், மந்திரம் பண்ணியும்
சமாரியா நாட்டு மக்களை மடமை ஆக்கினான்.
P.C. : Social Samosa
நிலைமைகள் இப்படியிருக்க
பிலிப்பு எனும் இறைபோதகர் சமாரியா ஊருக்குள் வருகிறார்,
கடவுளின் பெயரால் அசுத்த ஆவிகளையும் விரட்டுகிறார்,
கடவுளின் பெயரால் அற்புதமும், அதிசயமும் செய்கிறார்.
பிரமித்த அநேக மக்கள் நற்செய்தியை நம்பினர்,
உண்மைக்கடவுள் இயேசுகிறிஸ்துவை
உளமார ஏற்றுக்கொண்டனர்,
வித்தைக்காரன் சீமோனும் ஏற்றுக்கொண்டான்.
பிலிப்பு சொன்னதை ஏற்றுக்கொண்டு
இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அநேகர்
நீரினால் திருமுழுக்கும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நல்ல செய்தி கேட்டு,
பேதுரு, யோவான் எனும் இறைப்பணியாளர்கள்
சமாரியா ஊருக்குள் அனுப்பப்பட்டனர்.
நீரினால் திருமுழுக்கு பெற்ற அவர்களுக்கு
பரிசுத்த ஆவியினால் திருமுழுக்கு கொடுப்பதற்காக
ஜெபித்து மக்களின் தலையின் மேல் கையை வைத்தனர்
பயபக்தியோடு கேட்டுக்கொண்ட மக்கள்
பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டனர்
பயபக்தியோடு கடவுளை தேடாமல்
பார்த்துக்கொண்டே இருக்கிறான்
இந்த வித்தைக்காரன் சீமோன்.
விட்டதா ஆசை இந்த வித்தைக்காரனை ?
இல்லை, ஆசை விடவே இல்லை.
தானும் அதுபோல பிறர்மீது கைவைத்தால்
கடவுள் இறங்கவேண்டும் என்று விரும்பி
பணக்கட்டுகளை கொடுத்து கடவுளின் வரம் வேண்டினான்.
P.C. : Financial Express
வித்தைக்காரன், வித்தகரையே விலைகொடுத்து வாங்கி
விற்பனைசெய்ய விருப்பப்பட்டான்.
திருமுழுக்கு எடுத்தாலும் ஒட்டுண்ணிகள் ஒட்டிக்கிட்டு தான் இருக்கு.
சுகமும் சுபிட்சமுமே அவனுக்கு இரு கண்களாக இருக்கு.
"காசே தான் கடவுளடா" என்று அன்றே
பாதை அமைத்து சாலை போட்டான்.
காசு கொடுத்து கடவுளையும் கைக்குள்ள வச்சுக்கிறலாம்னு
கிறுக்குத்தனமா கணக்கு போட்டான் மாயவித்தைக்காரன்.
"இது கடவுள் மேலுள்ள பற்று அல்ல,
இது காசை கடவுளாக்கும் புற்று".
பேதுருவுக்கும், யோவானுக்கும் பொறுக்கமுடியாத கோபம். . .
"கடவுள் வரத்தையா காசுகொடுத்து கேக்குற?
சுய விளம்பரத்திற்காக, தூய ஆவியானவரை கேட்குற
நீயும் நாசமா போவே, உன் பணமும் நாசமா போகும்."
இன்று அதுபோன்ற பேதுருவும், யோவானும் குறைவு தான்!
ஆலயக்கோபுரம் கட்ட அதிகப் பணம்கொடுத்தால்
ஆண்டவரை மறந்து அற்பமனிதனை ஆராதிக்கிறார்கள்.
காசு கொடுப்பவருக்கு தான் எங்கும் முதலிடம்.
கல்வெட்டுப் பெயருக்கு தான் இங்கு கல்லெறி சண்டைகள்.
கல்வெட்டுப் பெயர் என்ன கடவுளைப்பார்க்க E-PASS ஆ?
சட்டங்களும், சம்பிரதாயங்களும்
சீமோன்களை இன்னும் குறைத்த பாடில்லை. . . .
"கொட்டிக்கொடுக்கும் பணமெல்லாம்
நிச்சயம் கோவில் கணக்கில் இருக்கும்;
ஆனால், ஆண்டவரது கணக்கில் இருக்கும் என
நிச்சயித்து சொல்லமுடியாது."
சகேயுன்னு ஒருத்தரு கடவுளைப்பார்த்ததும்
காசை எல்லாம், கால் தூசாக பார்க்கிறார்.
சீமோன்னு மாயவித்தைக்காரர் ஒருத்தரு
கடவுளையே காசுகொடுத்து வாங்கப்பாக்குறாரு.
பணத்தை வைத்து புத்தகத்தை வாங்கலாம்; புத்தியை வாங்க முடியாது.
குடிக்க குடிக்க தாகம் அடங்காத கடல்நீரைப்போல தான் பணமும்.
பணம் தேவை தான்; தேவதை அல்ல.
சில்லரைகளைத் தேடித்தேடித்தான்
நாணயத்தை இழந்து விடுகிறோம்.
சகேயு இயேசுவைப் பார்க்கவிரும்பினார்;
இயேசு சகேயுவைப் பார்த்தார்.
கொஞ்சம் தூரம் தான் இயேசுவோடு நடந்தார்;
மன்னவராம் மாணிக்கம் கிடைத்தவுடன்,
மண்ணாகியப் பணத்தை உதறிவிட்டார்,
நித்திய வாழ்விற்கான இரட்சிப்பை பெற்றுக்கொண்டார்.
மாயவித்தைக்கார சீமோனோ,
காசுகொடுத்து கடவுளைப்பெற
நாகரீகமாக நாற்காலி போட்டார்.
கோபத்தில் சாபத்தை வாங்கிக்கொண்டார்.
இவங்க இரண்டு பேரு வாழ்க்கையிலையும்
இருந்து முடிவா சொன்னோம்னா,
காசு இல்லனா, கஷ்டம் இல்ல! - நம்ம வாழ்க்கையில
இயேசு இல்லனாத்தான் பெருங்கஷ்டம்!!
காசில்லாம கடவுள் அருளால் பிழைத்திருப்பவனும் உண்டு
காசிருந்தும் கடவுளை ம(து)றந்ததால் மடிந்துபோனவனும் உண்டு!
போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து – எனவே, இருப்பது
போதும் என வாழ்ந்திடுவோம் பண ஆசையைத் துறந்து !!
P.C. : Steemit
பணமல்ல, நல்ல மனமே முக்கியம்! - மனம் தூய்மையானால்
பரமன் கண்களில் கடாட்சி பெறுவது நிச்சயம்.!!!
("காசு இல்லனா கஷ்டம் தானோ?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த வரிகள், 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' மூலம் நடத்தப்படும் குறுநேர மெய்நிகர் வாராந்திர கூடுகைக்காக 13.10.2020ல் எழுதப்பட்டது. யாவரையும் ஊக்கப்படுத்துவதற்காக 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' எடுக்கும் இந்த முயற்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்தப் பதிவிற்கு எனக்கு ஆலோசனை கொடுத்து உதவிய எனது தந்தை, அண்ணன் SF, அக்கா PHILO ஆகியோர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.)






Really Nice.
ReplyDeleteMay God Bless You
Very Kind of You.
DeleteThank you for your kind words. . .
காசு இல்லாமல் பிழைத்தவனும் உண்டு, காசு கடலாய் இருந்து மரித்துவனும் உண்டு என்ற வரிகளும்..
ReplyDeleteகாசு இல்லன்னா பரவாயில்லை ஆனா இயேசு இல்லன்னா ரெம்ப கஷ்டம் ன்னு யதார்த்த வரிகளில் பதிவிட்டமைக்கு மிக்எ நன்றி
தங்களது வார்த்தைகள் உற்சாகமும் ஊக்கமும் கொடுக்கிறது, உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
Deleteஇறையாசீர் உங்களைத் தொடர்ந்து நடத்தட்டும்.
wow really super. Really we can't live without Jesus..
ReplyDeleteBullseye.
DeletePraise God.
Nice Jesman.. keep it up
ReplyDeleteThank you fro your encouragement.
DeleteBlessings Upon U.
அருமை அருமையான பதிவு
ReplyDeleteநன்றி வினோத்.
Deleteஇறையாசீர் நம்மைத் தொடர்ந்து நடத்தட்டும்.
Each words are like crystals.Wonderfull and thoughable messages.All the best Anna👍
ReplyDeleteThank God.
DeleteBlessings Upon U