தானியேலோவென்றால், . . .. தான் முன் செய்துவந்தபடியே,
தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு
ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேல் 6:10
"அரசனைத் தவிர வேறு யாரிடமும் வேண்டுதலோ, விண்ணப்பமோ
செய்யக்கூடாது; மீறினால் சிங்கத்திற்கு இரையாக்கப்படுவீர்கள்"
என்ற ஒடுக்குதலும் அடக்குமுறையும் இருந்தபோதிலும்,
தானியேல் தன் வழக்கப்படி மூன்று வேளையும் தேவனை வேண்டி,
ஸ்தோத்தரம் செலுத்தினான்.
கொலைமிரட்டல், அடக்குதல் எல்லாவற்றையும் விட
ஆண்டவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு செய்யும் ஜெபம் தான்
தானியேலுக்கு உயரியதாக, முக்கியமானதாக இருந்தது!
இப்படியிருக்க, தேவனிடத்தில் செய்யும் ஜெபத்திற்கு
நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்
என்று நம்மை நாமே ஆராய்ந்து அறிவோம்.
P.C. : Google Images

Prayer brings victory
ReplyDeletePraise the lord
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Vinoth
Delete