கற்க - நிற்க

ராஜா கட்டளையிட . . தானியேலைக் கொண்டுவந்து, . .
சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; 
ராஜா தானியேலை நோக்கி: "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற 
உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்" என்றான்.
தானியேல் 6:16

அரசகட்டளையை மீறிய தானியேலை சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்.
 தப்புவிக்க வழிதேடியும், அரசனாலும் முடியவில்லை! 
அரசன் தானியேலிடம் வந்து, "உன் தேவன் உன்னை தப்புவிப்பார்' என்றார். 
இங்கு அரசனது விசுவாசமே குறிப்பிடத்தக்கது.

உயிரை வாங்கும் கூட்டத்தின் மத்தியிலும், 
தானியேலை உற்சாகப்படுத்துகிறது ராஜாவின் விசுவாசம். 
இந்த அரசரும் ஆண்டவரை விசுவாசிக்கிறாரே எப்படி? 
தானியேலின் நடைமுறைகளும் , இறைபக்தியும் தான் 
இவரது விசுவாசத்திற்கும் நீரூற்றியிருக்கிறது! 
தானியேலிடம் கற்போம், கடைபிடிப்போம்.

P.C. : TAMIL-ODB.ORG

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED