உயர்ந்த வழிகள், உயர்ந்த எண்ணங்கள்

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; 
உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 55 : 8

ஆண்டவர், ஆடுமேய்த்த தாவீதைத்தான் அரசன் ஆக்கினார்;
பெற்றோரற்ற அடிமைப்பெண் எஸ்தரைத்தான் அரசி ஆக்கினார். 
தெளிவாக பேசத் தெரியாத மோசேயின் பேச்சுக்கு தான் அரசனே அஞ்சினான்.
 ஏளனமாக பார்க்கப்பட்ட நோவாவின் பேழைதான் வெள்ளத்திற்கு தப்பியது.

நம் வாழ்வைக்குறித்து பிறரது பார்வையிலோ அல்லது
 நமது பார்வையிலோ ஏதுமில்லை! 
ஆண்டவரது பார்வையிலே அனைத்தும் உள்ளது! 
நம் வாழ்வைப்பற்றிய நமது நினைவுகளை விட, 
அவரது நினைவுகள் அதிகம் உயர்ந்தது, உகந்தது மற்றும் சிறந்தது.

புகைப்படச்சான்று: Fearless Soul

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED