தேவ இரக்கம்

என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்;
. . . நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, 
உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, 
எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
தானியேல் 9:18

நாம் தினமும் ஆண்டவரிடத்தில் உரையாடும் போதும், 
மன்றாடும் போதும் நம்மை வெறுமையாகத் தாழ்த்தவும்; 
நமது நற்செயல்களையோ, சுய நீதியையோ நம்பாமல், 
தேவரீருடைய அளவற்ற இரக்கங்களையே நம்பி 
அவரது திருப்பாதம் சேரவும் அறிவுறுத்தப்படுகிறோம்.

ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்;
என்று நமது இறை வேண்டலிலே நம்மை நாம் தாழ்த்தும் போது, 
இரக்கமுள்ள தேவனால் 
நமது வேண்டுதல் கேட்கப்படும், நமது பாவங்கள் மன்னிக்கப்படும், 
நமது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும், பதிலும் அருளப்படும்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED