அறிவோம்-அறிவிப்போம்!

உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; 
நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய். 
ஓசியா 2:20

நாம் வாழும் ஊரிலே, நியமனம் என்றாலே நிரந்தரமில்லை! நியமனம் எதுவுமே, சில நாட்களில் முடக்கப்படுகிறது அல்லது ரத்து செய்யப்படுகிறது! 
ஆண்டுகள் இடைவெளியில் ஆட்களே மாறும் பொழுது,
 APPOINTMENT-ம், ORDER-களும் மாறாதா என்ன? 

கிருபையும் இரக்கமுமான ஆண்டவர், நம்மை அவருக்காக, 
அவர் பணிக்காக நியமிப்பேன் என்கிறார்!
 நாம் கர்த்தரை அறிந்திடவும், அவரை பிறர்க்கு அறிவித்திடவுமே இந்நியமனம்! 
மாறாத இந்த நியமனம், நமது மாற்றத்திற்கானது மட்டுமல்ல, 
மறுரூபத்திற்குமானது. ஆண்டவரை அறிவோம்-அறிவிப்போம்!

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED