உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை;
உன் சந்திரன் மறைவதுமில்லை;
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்;
உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20
சுளீரென்று வெயில் அடித்தாலும்
சூழ்ந்திருப்பது இருளென்றால் என்ன செய்வது?
முரண்பட்ட சூழ்நிலையும், மாறுபட்ட மனநிலையும்
நமது துக்கத்தை பெருக்கி, இருட்டை கூட்டுகிறது.
வெளிச்சம் தேவை என தேடின்,
தேவனே நித்திய வெளிச்சமாயிருக்கிறார்.
சத்திய வெளிச்சம் நமக்கு நித்தியமாயிருக்க,
காலநிலையா நமக்கு காரிருள் கொடுக்கும்?
உண்மையான பேரொளியை நாம் பெற்றுக்கொண்டால்,
நமது சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்;
துக்க நாட்களும் முடிந்து போகும்!
நிரந்தர வெளிச்சம் பெற வேண்டுவோமாக!!
புகைப்படச்சான்று: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteBlessings Upon U
ReplyDelete