மண்ணிலிருந்து மாணிக்கம்

கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; 
நீர் எங்களை உருவாக்குகிறவர், 
நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
ஏசாயா 64:8

குயவன் களிமண்ணைப் பானையாக வனையும்போது 
ஒன்றை மட்டும்.வனைந்துவிட்டு, மற்றதை நகலெடுப்பதில்லை. 
அவர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே முக்கியத்துவம் கொடுத்து, 
தனக்கே உரிய பாணியில் சிறப்பாக்குவார். 
குயவன் கையில் செல்லும் மண் தான் பானையாகும், பயன்படும்!

'கடவுளே, எங்களைப் படைத்த எம் தந்தையே, நீர் பேசும், நாங்கள் கேட்கிறோம்; 
நீர் நடத்தும் நாங்கள் நடக்கிறோம்' என்று, மண்ணாகிய நாம்
 நம்மை மன்னவரின் கையில் ஒப்புக்கொடுப்போம்; 
அப்பொழுது மண்ணெல்லாம் மாணிக்கமாகும், மகிழ்வாழ்வு நம் வசமாகும்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED