கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து,
கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 17:7
திடீரென இனம்புரியாத வெறுமை, பதைபதைப்பு, பணத்தட்டுப்பாடு, கடன்சுமை,
எகிறும் மனதின் கொதிநிலை, ஒத்துழைக்காத சுற்றுசூழல். . .
இப்படி, புதுவிதமான புவியீர்ப்பு விசையில்தான் நாம் நகர்கிறோம்.
உயிரற்ற கைப்பேசி மட்டும் தான் நமக்கு கைப்பிடிப்போல் இருக்கிறது.
நிலையான நங்கூரமாய் நல்ல ஆண்டவர் நமக்கிருக்க,
நமது மனமோ, நிலையில்லாக் கைப்பிடிகளை நம்புகிறதே?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே,
நம்மை எந்நிலையிலும் வீழ்ந்திடாமலும், மூழ்கிடாமலும் காத்திடுவார்.
எனவே, நாம் உள்ளமட்டும், ஆண்டவரை மட்டும் நம்புவோம்.
P.C. : Google Images

Amen......
ReplyDeleteAmen
DeleteBlessings Upon U
ReplyDeleteBlessings Upon U
ReplyDelete