இன்னாரோ, இனியாரோ - யாராயினும்,
அங்க லட்சணமும்,
அடுக்குமாடி குடியிருப்பும்,
அடுக்கடுக்கான வாகனங்களும்,
அசைவுக்கு வேலையாட்களும்,
அடிதடி செல்வாக்கும்,
அதிரடி சொல்வாக்கும்,
அபூர்வமான பட்டங்களும்,
அதிகமான பந்தங்களும் . . .
இப்படி ஆயிரத்தெட்டு காரணிகள் தான்
ஒருவரை நமக்கு பெரியவராகக் காட்டுகிறது.
P.C. : Google Images
இதுதான் அளவுகோலா?
இரண்டு பேரு, கடவுள்கிட்ட வேண்டிட வராங்க,
ஒருத்தன் இறைவனின் சட்டதிட்டங்களை
நன்கு படித்து அதன்படி அள்ளிக்கொடுக்கும் 'பரிசேயன்'. . .
இவன் சொல்லுறான்,
"சாமி, நான் பொய் சொல்லல, ஏமாத்தல,
பித்தலாட்டம் பண்ணல, பிராத்தல் பண்ணல. . .
இதோ நிக்கிறானே Mr. அயோக்கியன்
இவன மாதிரி அக்கிரமம் பண்ணல.
நான் உத்தமன், நான் தான் உத்தமன்!"
வாரத்துக்கு ரெண்டு தபா FASTING- U
உங்களுக்குக்கூட நான் கரெக்டா PAYING- U . . . .
இப்படித்தான், தொண்டாலே பொழுது அளக்கேன்,
இத பண்ணுறேன், அத பண்ணுறேன்,
நித்தமும் தவம் பண்ணுறேன், ஜெபம் பண்ணுறேன்,
அப்படி இப்படினு அள்ளி உடுறான்,
'தகுதிமிகுந்த தலைமை நான் தான்'னு தம்பட்டம் அடிக்கிறான்,
தன்னைத்தானே துதிபாடி, தனக்குத்தானே
பாமாலையை பகுமானமாய் போட்டுக்கொள்கிறான்.
கடவுளிடம் வேண்டிட வந்த மற்றொருத்தனோ,
அடித்துப் பறிக்கும் ஆயக்காரன் - அநியாயமாக
வரியை வசூலித்து வாழ்க்கை வாழ்பவன்.
ஆயக்காரன் வேண்டும்பொழுதோ
தூரத்திலே நின்று, தலை குனிந்து,
தன்னை வருத்தி, மனங்கசந்து,
மார்பிலே அடித்துக்கொண்டு
அணை மீறும் புனலாய்
கட்டவிழ்ந்த காட்டாறாய்
கதறி அழுதான்,
"தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்!"
என்று மனவேதனையோடு மன்றாடினான்.
காக்காமுள்ளு கண்ணுல குத்துன வேதனையாய் வேண்டினான்,
தன்னை தரைமட்டும் தாழ்த்தினான்,
தன் தவறுக்காக அழுதான், அங்கலாய்த்தான்,
மனம்வருந்தி மன்னிப்புக்கேட்டான்.
இதுல யாரு பெரியவன்?
சட்டத்திட்டத்தை படித்து,
அதன்படி தொண்டு அளப்பவனா? - இல்ல
அடுத்தவனை அடித்து பறிப்பவனா?
நமது பார்வை என்ன?
ஆண்டவரது பார்வை என்ன?
செழுங்கருணை மிகுந்த இறைவன்
மனதின் வேண்டுதல்களை கேட்டுவிட்டு,
மனம்வருந்தி மன்னிப்புக்கேட்ட ஆயக்காரனையே
அவ்விருவரிலும் "நீதிமான்" என்று உயர்த்திக்காட்டினார்.
ஆயக்காரனது தரித்திரம் உடைந்தது,
அவன் வாழ்வில் புது சரித்திரம் பிறந்தது.
P.C. : Google Images
தாழ்மையாகத் தன்னைத்தான் தாழ்த்தியவனை
சிறகு கொடுத்து சிகரம்வரை உயர்த்தினார்,
சுயபெருமை பேசி "நான் தான் உயர்ந்தவன்" எனத்
தம்பட்டம் அடித்தவனைத் தூரமாய் தள்ளிவிட்டார்.
தன்மானம் பேசியவன் சிறியவனாக தாழ்த்தப்பட்டான்;
தன்னை தாழ்த்தியவனோ பெரியவனாக உயர்த்தப்பட்டான்.
நாமும் தாழ்மையாகப் பணிவதற்கு துணிய வேண்டும்.
நண்பர்களே, நல்லவர்களே
நம்மை நாமே உயர்த்திப் பிடிக்காமல் பணிவாக தாழ்த்தினால்,
கர்த்தரால் மிகவும் ஒய்யாரமாக உயர்த்தப்படுவோம்.
எனவே, நாமும் சிறியவர் எனும் சிந்தைகொள்வோம்;
ஆண்டவரால் பெரியவராகி சிகரம் தொடுவோம்.
("யாரு பெரியவன்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த வரிகள், 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' மூலம் நடத்தப்படும் குறுநேர மெய்நிகர் வாராந்திர கூடுகைக்காக எழுதப்பட்டு, 20.10.2020ல் அக்கூடுகையில் வாசிக்கப்பட்டது. யாவரையும் ஊக்கப்படுத்துவதற்காக 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' எடுக்கும் இந்த முயற்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.)


Simple and Super
ReplyDeletePraise God
DeleteNice. Super
ReplyDeleteThank God
Deleteபாமாலை பகுமானமாய் போட்டு கொள்கிறான்.. என்ற வரிகள் அருமை மாப்ள.. தகுந்த படத்தை பதிவேற்றம் செய்து நெற்றி அடி அடித்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி மாப்ள.
Deleteஇறையாசீர் நம்மை தொடர்ந்து நடத்துவதாக!
குறுகத்தரித்த குறள் போல சிறப்பு
ReplyDeleteஉங்கள் வரிகளில் வசந்தம்.
Deleteஇறையாசீர் நம்மை தொடர்ந்து நடத்தட்டும்.
Wonderful lines.
ReplyDeleteAwesome creativity.
Praise God.
DeleteGod Bless
Superb Jesman.
ReplyDeleteThank God.
DeleteVery Kind of You
Really Nice Article
ReplyDeleteGod Bless You Thambi
Praise God
DeleteThere shall be showers of Blessing. . . .
Blessings Upon U