உறங்கா விதைகள்

நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; 
தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; 
உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; . . .
ஓசியா 10:12

அலட்சியப்படுத்தப்பட்டு தரிசான நிலங்களையும் உழுது பண்படுத்தி, 
விதைப்புக்கு தயார்படுத்துவது வழக்கம். 
பின்பு விதைத்து, பராமரித்து மகசூலை எதிர்நோக்குவது மரபு. 
இது எதுவுமே செய்யமால், தானாக விளைந்து வரும் என்று காத்திருந்தால், 
நைல் நதியே புரண்டு வந்து பாய்ந்தாலும் பயனில்லை.

நீதியான காரியங்களை எங்கும் விதைக்கவேண்டும் 
என்பதே கட்டளையானதால்,  எந்த நிலங்களையும் தவிர்க்காது, 
இறையுதவியோடு பண்படுத்தி, விதைக்கவேண்டும். 
அசதியை பாராது அயராது விதைத்தால், 
அதனதின் காலத்தில் அமோக விளைச்சலை ஆண்டவர் கட்டளையிடுவார்.



Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED