குரலற்றோரின் குரல்

ஒருவன் தனக்குத்தானே உதவிக்கொள்ள முடியாவிட்டால், 
நீ அவனுக்கு உதவவேண்டும். 
எவனால் பேசமுடியாதோ, அவனுக்காக பேசு.
 துன்பப்படுகிற அனைத்து ஜனங்களுக்கும் நீ உதவ வேண்டும்.
நீதிமொழிகள் 31:8

குரலற்றவர்களின் குரலாய் இருக்க வேண்டும் என்பதே பொருள். 
இது சாதாரண விஷயம் அல்ல, 
இப்படி குரல்கொடுத்தால் குரல்வளையும் சிலவேளை நெரிக்கப்படும். 
ஆயினும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காய் உடன்நிற்பது உயரிய திருப்பணி.

ஜார்கண்ட் மாநில ஆதிவாசி மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகத் 
தொடர்ந்து போராடிய 83 வயது அருட்தந்தை.ஸ்டேன் சாமி கைதாகி 
சிறையில் அடைத்து 36 நாட்கள் கடந்து விட்டது, விட்டபாடில்லை. 
திருப்பணியாற்றும் இவர்போன்றோர் முன்மாதிரிகள். 
அருட்தந்தையின் விடுதலைக்காக ஆண்டவரிடம் வேண்டுவோம்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED