இயேசுவோ:
சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்;
அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்;
பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
அவர்கள்மேல் கைகளை வைத்து,
பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போனார்.
மத்தேயு 19:14-15
ஆண்டவரை நாடி வந்த சிறுவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.
ஆண்டவரோ, சிறுபிள்ளைகளுக்கு வழிவிட வாய்மொழிகிறார்,
பரலோகராஜ்யம் அத்தகையோருடையது என்று அருள்மொழிகிறார்.
தடுக்கப்பட்டவர்கள் தலைமீது கைகளை வைத்து ஆசீர்வதிக்கிறார்.
தாழ்மையான மனதிற்கும், கீழ்ப்படியும் குணத்திற்கும்,
மன்னிப்பதற்கும், மறப்பதற்கும், நன்மைக்கும், உண்மைக்கும்,
சிறுபிள்ளைகள் நமக்கு மாதிரிகள்;
சிறுபிள்ளைகளைப் போல (மனம்)மாறுவோம்.
நம்மை என்றும் விரும்பும் ஆண்டவரை நாமும் விரும்புவோம்,
அவரது விருப்பப்படியே நாளும் வாழ்வோம்.
P.C. : Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Deleteகுழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteகுழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்
Delete