நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து,
உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்;
யோவேல் 2:13
நாமே, அன்றாட வாழ்வில் அல்லல் படுகிறோம்;
ஆனால், அறிவுரை சொல்லுவதிலோ அசத்துகிறோம்.
நம்மேல் விதைக்கப்பட்ட விதையோ மக்கிப்போய்விட்டது,
நாமோ அறுவடைக்கு ஆள் எடுக்கிறோம்.
பக்கம்பக்கமாக எழுதியும், பரிட்சையில் தோற்றுப்போனால் என்ன பயன்?
எங்கோ கோளாறு இருக்கிறது!
"பிழைகளை யார் அறிவார்?
படைத்த ஆண்டவர் மட்டுமே முழுமையாக அறிவார்!"
எனவே, ஆண்டவரிடம் திரும்புவதே ஒரே வழி.
உணர்ச்சியில் சட்டையைக் கிழித்து அல்ல, உள்ளான இதயத்தை திறந்து
முழுமனதோடு ஆண்டவரிடம் திரும்புவோம்.
இரக்கமும், கிருபையுமுள்ள ஆண்டவர்தாமே
நம்மை சரிபடுத்தி, நடத்துவாராக!
P.C.: Google Images

Amen......
ReplyDeleteAmen
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete