யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக்
கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்;
அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.
யோனா 1:17
கடலில் தூக்கியெறியப்பட்ட யோனாவுக்கு
அடுத்த நொடி என்னவென்று தெரியாது, ஆனால், கர்த்தருக்கு தெரியுமே!
கப்பலிலிருந்து விழும் யோனாவை விழுங்கி மூன்றுநாள்
வயிற்றில் வைக்கும்படி ஒரு பெரிய மீனை
ஆண்டவர் ஆயத்தப்படுத்தியிருந்தார். இதுவே இறைத்திட்டம்.
இதேபோன்ற இறைத்திட்டம் நமது ஒவ்வொருவரின் வாழ்விலும் உண்டு.
இதை நாம் அறியாமல் இருக்கலாம்; ஆனால், ஆண்டவர் அறிவார் அல்லவா!
எனவே, ஆண்டவரை நம்புவதும், அவர் சத்தத்திற்கு அடிபணிவதும்,
அவரது சித்தத்தை உணர்வதுமே
அடுத்த நொடி அச்சத்தையும், அழுகையையும் மாற்றும்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Mapla
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteBlessings Upon U Aras Annan
ReplyDelete