எனது பார்வையில்

அப்பொழுது இயேசு: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்
 என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: 
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
மத்தேயு 16:15-16

இறைமகன் இயேசுவை மக்கள் தத்தம் பார்வைக்கு ஏற்ப பலவிதமாக 
எண்ணினார்கள். ஆண்டவர், தம் உடனிருந்த சீடர்களைப்பார்த்து, 
"நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்" என்று கேட்டார். 
அப்பொழுது, சீடர் சீமோன் பேதுரு சொன்ன பதிலால்
 ஆண்டவரே பேதுருவை வாழ்த்தினார்.

"நாம் ஆண்டவரை யார் என்று சொல்லுகிறோம் - எப்படி பார்க்கிறோம்?
அற்புதம் செய்பவராகவா - அன்பு நிறைந்தவராகவா? 
உதவிக்கரம் நீட்டுபவராகவா - உற்றத்துணையாகவா? 
தேவை தீர்ப்பவராகவா - தேடிவந்த தெய்வமாகவா?
 இரட்டிப்பாய் கொடுப்பவராகவா - நம்மை இரட்சிப்பவராகவா?. . . . . . . 
 . . . . . . நமது பார்வையும் பதிலும் என்ன?

P.C.: Google Images



Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED