நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ,
அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்,
அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
மாற்கு 11:24
ஆண்டவரிடம் வேண்டுதல் செய்யும் நாம்,
"அவரிடம் எதையெல்லாம் கேட்கிறோமோ
அதையெல்லாம் பெற்றுக்கொள்வோம்".
இந்த விசுவாசம் நம்மில் 'ஆல்போல்' உறுதியாக இருக்கவேண்டும்.
நாம் கேட்டது ஒருவேளை தாமதமாகலாம்; ஆனால், ஒருபோதும் தள்ளப்படாது!
விசுவாசிகளின் தந்தையான ஆபிரகாம், தனக்கு வாக்குத்தத்தம்
பண்ணப்பட்டதை "விசுவாசத்தோடு காத்திருந்து" பெற்றுக்கொண்டார்.
விசுவாசத்தோடு வேண்டுதல் செய்த எவரும்
ஒருபோதும் வெறுமையாய் போனதில்லை.
எனவே, விசுவாசத்தோடு வேண்டுவோம் - விண்ணகத் தந்தையிடம் பெற்றுக்கொள்வோம்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U Mapla
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete