அடுத்த தல . . . !

தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று 
அவர்களுக்குள்ளே (சீஷர்களுக்குள்ளே) வாக்குவாதம் உண்டாயிற்று.
லூக்கா 22:24 


இறைமகன் தமது பாடுமரணத்தைப் பற்றி பேசியவுடனே அவர்தம் சீடர்களுக்கு 
"தங்களில் யார் பெரியவன்" என்ற வாக்குவாதம் துவங்குகிறது. 
ஆயனை மறந்துவிட்டு, அடுத்தகட்ட தலைமைக்கு ஆயத்தம் நடைபெறுகிறது. 
"ஆயத்தம் அல்ல; அடிதடிக்கு ஆரம்பம்" என்பது தான் சரி.

தாழ்மையைப் பற்றி இயேசுவிடம் நேரடி உபதேசம் கேட்ட 
அவர்களையும் "தலைமை மோகம்" விட்டபாடில்லை. 
ஆனால், ஆண்டவர் இயேசுவோ அவர்களை உடனுக்குடன் சீர்படுத்தினார். 
சீர்படுத்தும் ஆண்டவர் தாமே நம்மையும் சீராக மாற்றி, 
தாழ்மையைக் கொடுத்து நன்மையாக்குவாராக!

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED