ஒருபோதும் உனைப்பிரியா . . .

இயேசு: நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்,
உங்களிடத்தில் வருவேன்.
யோவான் 14:18

சிலுவைமரணத்திற்கு முன் சீடர்களிடம் ஆண்டவர் இப்படி சொல்கிறார். 
இயேசு நாதரின் பாடுமரணத்தின் போது சிதறிஓடிய சீடர்கள், 
கையறு நிலையில் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட 
இவரா நம்மைக் காப்பாற்றுவார்? என கலங்கியிருக்கலாம்! 
ஆண்டவரோ, சொன்னபடியே செய்தார்.

உடனிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, உண்மையாக தம்மை பின்பற்றும்
 யாவருக்கும் இந்த இறைவார்த்தைகள் சொந்தமாகும். 
ஆண்டவரை பின்பற்றும் நமக்கு தவிப்புகளும் தடைகளும் வரலாம்; 
ஆனால், ஒருக்காலும் தனித்துவிடப்படுவதில்லை!
 எந்நிலையிலும் நம் உன்னதர் உடன்வருவார், தங்குவார், தப்புவிப்பார்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED