இயேசு: என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்;
யோவான் 15:4
ஒரு கொடியானது தனியாக நிற்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை.
கொடிவளர, நிலையாக நிற்க ஒரு செடி தேவைப்படுகிறது.
செடியில்லாத கொடி காய்ந்து கருகிவிடும்;
செடியோடு நிலைநிற்கும் கொடிதான் பூத்து, காய்காய்த்து, கனிதரும்.
மெய்யான திராட்சை செடியாக நமது இயேசு நாதர் இருக்கிறார்,
நாம் கொடியாக அவரில் இணைவோம்.
நாம் தனித்தே இருப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருந்தால் மட்டுமே
நாம் மிகுந்த கனிகளை கொடுப்போம்.

Amen
ReplyDeleteBlessings Upon U
Delete