அலங்கரிக்கும் ஆபரணம்

என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், 
உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. 
அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், 
உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
நீதிமொழிகள் 1:8-9

பெற்றோர் வாயின் வார்த்தைகளைக் காதில் கேட்டாலே காது கலவரமாகிறது. 
நீதி, நியாயம், நிதானம். . . இதையெல்லாம் 
அவர்கள் எடுத்துச்சொன்னாலே நமக்கு எரிச்சல் வருகிறது; 
அவற்றின் மாண்புகள் புரியும்போதே, பெற்றோரின் அருமை தெரிகிறது.

அப்பாவின் புத்திமதியும், அம்மாவின் போதனைகளும் மகத்தான மாணிக்கங்கள்!
இந்த அன்புநிறை அறிவுரைகள், நமது தலைக்குக் கிரீடமும், 
கழுத்தின் வைர ஆபரணமுமாய் நம்மை அலங்கரிக்கும்.
 இவற்றைத் தள்ளாமல் கேட்டுக்கொள்ளும்போது, 
சிறிய பூச்சியும் சிறப்பான ஆட்சிசெய்யும்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED