நம்ம ஆளுநர்

அப்பொழுது பிலாத்து: . உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். 
இயேசு பிரதியுத்தரமாக: 
பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், 
என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; . .என்றார்.
யோவான் 19:10-11

அதிகாரமிக்க ஆளுநர் பிலாத்து, இறைமகன் இயேசுவிடம்
 "உனக்கு சிலுவை சாவோ, விடுதலை வாழ்வோ 
ஏதும் வழங்க எனக்கு அதிகாரமுண்டு" என்றவுடன், இயேசு அவரிடம் 
"SORRY SIR, பிதா ஒருவரே எனக்கு அதிகாரி! அவர் கொடுக்காமல், 
என்மேல் உங்களுக்கு ஒரு அதிகாரமுமில்லை" என்றார்.

பிதாவின் அனுமதியில்லாமல் நமது தலையின் முடியும் உதிராது; 
இப்படியிருக்க முள்முடியும், சிலுவைச்சாவும் பிலாத்து தீர்மானிப்பாரா என்ன? 
நம்மேல் சகல அதிகாரமும் படைத்த பிதாவின் சித்தமில்லாமல் 
நமக்கு ஒன்றும் நடக்காது; எனவே,நமக்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED