கயல்விழி

உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; 
உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
நீதிமொழிகள் 4:25

நமது கயல்விழிகள் தான், 
கடவுள் தந்த நமது உடம்புக்கே ஒளிதரும் விளக்காக இருக்கிறது. 
நம் கண் பார்வை நேரானால் தான், கடக்கும் பாதை சீராகும்.
 ஏனெனில், நாம் பார்க்கும் பார்வை தான், 
நமது பாதத்திற்கு பாதையைச் சொல்கிறது.

நமது உடம்புக்கே உத்திரமான கண் தான், நமது அசைவுகளுக்கு அடித்தளம்.
 அத்தகைய பார்வையைக் கட்டுப்படுத்துவது அதீத சிரமம் தான். 
ஆனாலும், ஆண்டவர் துணைபுரிந்தால் கட்டுப்படுத்திவிடலாம்! 
எனவே, நேரான மற்றும் செம்மையான பார்வைக்காக
 ஆண்டவரிடம் மன்றாடுவோம்.


Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED