சிநேகிதனே. . .!

நன்றி சொல்லுவோம் !



சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; 
சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.
நீதிமொழிகள் 18:24

நமது நல்லபொழுதுகளை பட்டியலிட்டால்
 நம் நண்பர்களுக்கு முக்கியப்பங்குண்டு. 
நமது முக்கிய தருணங்களிலும், இக்கட்டான சூழலிலும்
 நமது உடனிருந்து, தோள்கொடுத்து நமக்கு பக்கபலமாய் இருந்து, 
பதற்றங்களிலும், பயணங்களிலும் பங்களிக்கும் நட்பு,
நமக்கு இறைதந்த வரம்.

மனக்குழப்பம், மனசோர்வின் தருணங்களில் மனம்விட்டு பேசவும், 
நல்ல ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் 
 நல்ல சிநேகிதன் உள்ளவரெல்லாம் உயர்ந்தவரே. 
நமக்கும் கிடைத்த உயர்வான நட்பு வட்டாரத்திற்காக 
 ஆண்டவருக்கு உளமார நன்றி சொல்லுவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED