நன்றி சொல்லுவோம் !
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்;
கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால்
அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
ஆதியாகமம் 26:12
நெல்லும்-எள்ளும், உண்பது எதுவும், இறையாசீரால் நமக்கு கிடைப்பது தான்.
நாம் உண்ணும் உணவிற்காக விதைகளை விதைப்பதும்,
விளைச்சளை வீடுசேர்ப்பதும் விவசாயிகள் எனும் மாமனிதர்களே.
நமது உணவுக்காக உழைக்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்காகவும்
ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
நாட்டிற்கே சோறு போடும் உயர்ந்த வர்க்கம்,
இன்று தன் உரிமைக்காக போராடுகிறார்கள்;
கோடிக்கணக்கில் கூடிநின்று கோஷம் போடுகிகிறார்கள்.
அடித்து உதைத்தவனுக்கும் உணவு கொடுக்கும் உத்தமர்களுக்காக,
அவர்தம் உரிய கோரிக்கைகளுக்காக நாமும் ஆண்டவரிடம் வேண்டுவோம்.
P.C.: Google Image

விவசாயிகள் விவாத பொருளாய் மாறிடலாமோ?
ReplyDeleteவிவசாயமும் கேள்விக் குறியாய் ஆகிடலாமோ?
விவசாயிகள் விசுவாசிகளாய் மாறிட வேண்டும்
விவசாயமும் வளர்ந்து பெருகிட வேண்டும்
அருள் புரிவாய் இறைவா!
விவசாயிகள் துயர் துடைப்பாய் விரைவாய்!!
தங்கள் கரிசனைக்கு நன்றி !
Deleteஇறையாசீர் தாமே உங்களை தொடர்ந்து நடத்துவதாக !!
Blessings Upon U
ReplyDelete