நன்றி சொல்லுவோம் !
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால்,
உன் பெலன் குறுகினது.
நீதிமொழிகள் 24:10
நமது தோல்விகள் தான் நமக்கு சரியான பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்,
வெற்றிக்கான சரியான படியை கா(க)ட்டிக்கொடுக்கும்.
எனவே, தோல்விகளை கண்டு சோர்ந்து போகக்கூடாது.
வெற்றிகளில் பெற்றுக்கொள்ளவும், தோல்விகளில் கற்றுக்கொள்ளவுமே
பொன்மொழியும் நமக்கு போதிக்கிறது.
நாம் தோற்கும் பொழுதுதான், நமது உண்மைநிலை வெளிப்படும்.
அதன்பின்தான் மனமும் கூடுதலாக உறுதிப்படும்;
சரியான பயிற்சிகளும்-முயற்சிகளும் அதிகப்படும்; இலக்கும் நம் வசப்படும்.
இப்படி தடைகளே நமக்கு படிகளாக இருப்பதால்,
தோல்விகண்டு வருந்துவதைவிட,
நாம் சந்தித்த தோல்விகளுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
P.C.: Google Images

Amen🙏
ReplyDelete"வெற்றி பெற்றுக்கொள்வதற்கும்
ReplyDeleteதோல்வி கற்றுக்கொள்வதற்கும்"
மிக அருமை, மகிழ்ச்சி ... நன்றி
பெற்றுக் கொண்டதை
கற்றுக் கொடுப்பதற்கு.
ஏணி வெற்றி என்றால்
ஏணியை உறுதியாக்கும் ஆணி
தோல்வி எனலாம்
வெற்றி நம்மை சிறக்க வைக்கும்
தோல்வி நம்மை சிந்திக்க வைக்கும்
வெற்றி மணம் மகிழ அருளப்பட்டது என்றால்
தோல்வி மணம் திருந்த வாய்ப்பளிக்க பட்டதேயாகும்
வெற்றி மேலேறித் தலைக் கனமாக வேண்டாம்
தோல்வி கீழிறங்கி மணம் பாரமாகவும் வேண்டாம்
தோல்வி கண்டோரை இறைவன் அணைக்கிறார்
வெற்றி பெறவே அவரிடம் அழைக்கிறார்
தோல்வியை அவர் பாதத்தில் வைப்போம்
வெற்றியை அவர் நாமத்தில் பெறுவோம்
இறைவனின் திருப்பெயர் மாட்சியுறட்டும்!!!
இறையாசீர் தாமே உங்களை தொடர்ந்து நடத்துவதாக!
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U Godwin
ReplyDeleteBlessings Upon U Ramya
ReplyDelete