நன்றி சொல்லுவோம் !
நான் உனக்குப் போதித்து,
நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
சங்கீதம் 32:8
எல்லா சூழ்நிலையிலும், ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் போதிப்பவரும்,
வழிகாட்டுபவரும், ஆலோசனை கொடுக்கிறவருமாக இருக்கிறார்.
இந்த நல்ல செயல்களை தமது தனிப்பட்ட வாழ்வில் வெளிக்காட்டும்
ஒவ்வொரு நல்ல உள்ளங்களையும் பார்த்து ஆண்டவர் அகமகிழ்கிறார்.
அறநெறியை சொல்லிக்கொடுத்து, அறிவுரைகளை அள்ளிக்கொடுத்து,
அறிவைப் புகட்டி, அகவிருளை ஓட்டி, நமக்கு வழிகாட்டியாக
நமது வாழ்வில் பயணித்த ஒவ்வொரு ஆசிரியர்களுக்காகவும்,
நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்,
அவர்களுக்காக சிறப்பாக வேண்டுதல் செய்வோம்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete