நன்றி சொல்லுவோம்!
கர்த்தர் தமக்கு பிரியமானவருக்கு தூக்கம் தருகிறார்.
சங்கீதம் 127:3
நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது தூக்கம். படுக்கைக்கு முன்,
அந்தந்த நாளின் செயல்களை சரிபார்த்து திருத்துதலும்,
மறுநாளின் செயல்களை திட்டமிடலும் நமது பழக்கமாக இருக்கட்டும்.
தூங்குவதும் துயிலெழுவதும் நமது மகிழ்வான தருணங்களாக மாறட்டும்.
அளவற்ற கவலைகள் தூக்கத்தை கெடுக்கும்;
நாம் கவலைப்படுவதால் ஒன்றும் ஆகாது.
நமக்காக கவலைப்பட உண்மை தெய்வம் ஒருவர் இருக்கிறார்
என்ற நம்பிக்கையே நம்மை கவலையற்று தூங்கச் செய்யும்.
ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் அளவான, ஆரோக்கியமான
தூக்கத்திற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
P.C.: Facebook.com

Amen
ReplyDeleteGod Bless
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U
Deleteகைபேசித் திரை, கணினித் திரை, தொலைக்காட்சித் திரை, சின்னத்திரை, வண்ணத் திரை, வெள்ளித்திரை, பணமெடுக்கும் இயந்திரத் திரை (ஏ.டி.எம்) மற்றும் இன்னும் பல திரைகள் எனத் திரும்பும் பக்கமெல்லாம் திரைகளால் நிரம்பியிருக்கும் திரைக் காலத்தில் (Screen Age) வாழ்கின்ற எங்களுக்கு பலர் தொலைத்து தேடி திரிகின்ற "நித்திரையை" இலவசமாய் தந்தருளுகின்ற தயாளராசாவே எங்கள் இறைவா உம்மை போற்றிப் போற்றி.
ReplyDeleteஉம்மால் மட்டுமே எழுப்பக் கூடிய ஒரு நித்திய நித்திரைக்கு நாங்கள் செல்லுமுன் சத்தியத்திற்கு சாட்சி பகர அருள் புரிவாய் இறைவா . . .
தங்களது மேலான கருத்து, கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.
Deleteதங்களது வரிகளால், இறை நாமம் இன்னும் மேன்மைப்படட்டும்.
இறையாசீர் தாமே உங்களை தொடர்ந்து நல்வழிபடத்தட்டும்.
Amen
ReplyDeleteBlessings Upon U Ramya
Delete