புன்னகைப் பூக்கள்

நன்றி சொல்லுவோம் !


"அகமகிழ்ச்சியால் முகம் மலரும். . "
நீதிமொழிகள் 15:13

நமது சிரிப்பு தான் சிறப்பான சங்கீதம் என்போர் பலர். 
சிரிப்பு சிலவேளை அனஸ்தீசியா விட அதிகமாக வேலைசெய்யும். 
அப்படியிருக்க, அன்றாட வாழ்க்கையில் நாம் சிரிக்கவே சிலநாள் மறந்துவிடுகிறோம்; 
இதுவரை மறந்தது இருக்கட்டும்; இனிமேலாவது, சிரிப்பின் சிறப்பு மறவாமல் இருக்கட்டும்.

மலர்முகத்தோடு மகிழ்வாக வாழும் மக்களுக்கு, வாழ்க்கையே ஒரு விருந்தாகும். 
நமது வாழ்வை விருந்தாக்க அனுதினமும் ஆண்டவரிடம் வேண்டுவோம்; 
சிரித்த முகத்தோடு சிங்கார நடை நடப்போம். 
சிரித்த மற்றும் சிரிக்கும் பொழுதுகளுக்கெல்லாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED