நன்றி சொல்லுவோம்
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும்
இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
சங்கீதம் 121:8
கவனச்சிதறலால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கணக்கற்ற
சாலை விபத்துகளும், மின் தாக்குதல்களும் நம்மை சுற்றி நடக்கிறது;
வெறுமனே வீதியில் நடந்து செல்பவர்களும் விதிவிலக்கல்ல.
வயலுக்கு சென்றவர் வரப்பில் வழுக்கி விழுந்து முடிந்துபோன சம்பவமுண்டு.
ஆண்டவர் கிருபையால், நம்முடைய பயணங்கள் ஒவ்வொரு நாளும்
பாதுகாப்பாகவும், நன்மையாகவும் இருக்கிறது.
ஆண்டவரே, நம்மை எல்லா தீங்கிற்கும் விலக்கி காத்துவருகிறார்.
பயணங்களிலும், போக்குவரத்திலும் நம்மை
என்றும் காத்து வழிநடத்தும் ஆண்டவருக்கு நாம் நன்றி சொல்லுவோம்.
P.C.: Google Images

Thank You Jesus
ReplyDeleteAmen....
ReplyDeleteGod Bless!
Delete