நன்றி சொல்லுவோம் !
எருசலேமில் உசியா, புத்திசாலிகளால் அமைக்கப்பட்ட
எந்திரங்களை கோபுரங்களின் மேலும், சுவர்களின் மேலும் வைத்தான்.
இந்த எந்திரங்கள் அம்புகளையும், கற்களையும் எறிந்தன.
இதனால் உசியா பெரும் புகழ்பெற்றான்.
II நாளாகமம் 26:15
தொழில்நுட்பம் அடைந்த வளர்ச்சியாலும், செய்யும் புரட்சியாலும்
நாளுக்குநாள் நவீனங்கள் நம்மை வட்டமிடுகிறது.
ஒவ்வொரு நாளும் புதியபுதிய கண்டுபிடிப்புகளும், படைப்புகளும்
அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாய் நிற்கிறது.
ஆக்கப்பூர்வமான இந்த வளர்ச்சிகளுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால்
சிலவேளை நாம் படைத்தவரை விட்டுவிட்டு படைப்புகளையே நம்புகிறோம் - வணங்குகிறோம்.
இது அழிவுக்கு வழிவகுக்கும்; பேராபத்திற்கு நேராக நடத்தும்.
வளர்ச்சி சாதனங்கள் நம்மையல்ல, நாமே அவைகளை கையாள/கட்டுப்படுத்த ஆண்டவர் அருள்புரிவாராக.
P.C.: Google Images

Amen
ReplyDeleteஇயந்திரம் இறைவனை நினைவுப்படுத்தனமே தவிர
ReplyDeleteஇயந்திரமே இறைவனாகிடலாமோ, அது சரியோ
படைப்பல்ல படைத்தவரே வணக்கத்துக்குரியவர்
படைப்பெல்லாம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றிட வேண்டுமே
படைத்தவர் பெரியவர்
வணக்கத்திற்குரியவர்
படைக்கப்பட்டவன் இதை
உணர்ந்திட வேண்டும்
பயபக்தியுடன் இறைவனை
பணிந்திட வேண்டும்
பராபரணே போற்றிப் போற்றி!
உங்களது ஆக்கப்பூர்வமான சிந்தனை, இந்த கருத்துக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
Deleteமிக்க நன்றி.
இறையாசீர் நம்மைத் தொடர்ந்து நடத்தட்டும்.