நன்றி சொல்லுவோம் !
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர்,
ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன்,
நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9: 6
நமக்கான ஒருவர், நம்மில் ஒருவராய் இந்த உலகில் அவதரிக்க,
ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி
புண்ணிய குமாரன் பூவுலகில் பிறந்த்திருக்கிறார்.
ஒரு கன்னியின் கருவறை - காலியான கல்லறை என முழுக்க முழுக்க,
இவர் அதிசயம் நிறைந்த அற்புத மனிதர்,
அன்பை மட்டுமே அச்சாணியாக கொண்ட அன்பின் தெய்வம்.
இறைஅன்பின் பெருக்கத்தாலும், பூமிக்கு சமாதானமும் மகிழ்ச்சியும்
தேவையானதாலும் நம்மில் ஒருவராய் நம்மோடு இருப்பதற்காகவே
பிறந்த இம்மானுவேல் தெய்வம் இவர்.
"நமக்கான அன்பின் தெய்வத்திற்கு" நன்றி சொல்லும் விதமாக,
அவரது ஆவலான அன்பின் சலனம் நம் மூலம் எங்கும் பரவட்டும்.
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

இனிய கிறஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇறையாசீர் நம்மை நடத்தட்டும்.
Delete🌟Happy Christmas🌟
ReplyDelete🎄🎄🎉🎉
Blessings Upon U
Delete