நன்றி சொல்லுவோம் !
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும்
நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய
அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
அப்போஸ்தலர் 6:8
இறை விசுவாசத்திலும், பரிசுத்த ஆவியிலும் நிறைந்த
இளம் வாலிபன் ஸ்தேவான். ஆண்டவரது இதய கதறலை கேட்டு
இறுதிவரை உறுதியாய் வல்லமையான ஊழியம் செய்தார்;
உள்ளதை உள்ளதென்று உரக்க சொன்னார்.
கபடதாரிகளை கடுமையாக கடிந்து கொண்டதால்,
முடிவில் அவர்களாலே கல்லெறிந்து கொல்லப்பட்டார்.
தன்னை கொலை செய்த கொடூர குமபலை மன்னிக்கும்படி
இறைவனிடம் வேண்டியபடியே உயிர் துறந்த உத்தம ஊழியன்
தூய ஸ்தேவானை நன்றியோடு நினைவுகூருவோம்.
'தூய ஸ்தேவானைப்போல நாங்களும் இயங்க,
தேவனே எஙக்ள் இதயத்தை திறந்தருளும்'
என்று ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
P.C.: Google Images

Amen
ReplyDeleteGod Bless
Delete