நன்றி சொல்லுவோம் !
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்
அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.
மத்தேயு 28:20
திருமறையை நாம் வாசித்து அதன்படி நடப்பது,
அனுதின வாழ்வில் நமக்கு மாற்றத்தைக்கொடுக்கும்.
நம்மை உயிர்ப்பிக்கிறதும், குறைவற்றதுமான இந்த திருமறையை
வாசிக்கவும் தியானிக்கவும் கற்றுக்கொடுத்து வழிகாட்டி,
நம்மை கட்டியெழுப்ப அரும்பாடு படும்
நமது போதகர்களுக்காக நாம் நன்றி சொல்லுவோம்.
நம்மைவிட, இறை ஊழியர்களையே
இன்னல்களும், இடர்களும் அதிகதிமாக வட்டம்போடும்.
நம்மை கட்டியெழுப்பும் அவர்கள், தீயோனின் தொடர் தாக்குதல்களால் வெட்டி வீழ்த்தப்படாமல் இருக்க, நமது ஜெபம் அவர்களுக்கு அவசியம்.
அவரும் அவரது குடும்பமும் காக்கப்பட தொடர்ந்து நாம் மன்றாடுவோம்.
P.C.: Google Images

Amen.......
ReplyDeleteGod Bless
ReplyDelete