மருந்தாகும் மருத்துவர்கள்

நன்றி சொல்லுவோம்!


பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல்
 சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை;
மாற்கு 2:17

உலகமே மிரண்டு போய் இருந்த காலத்திலும்,
 உயிரைப் பணயம் வைத்து அருட்பணியாற்றி,
 என்றும் நமக்கான 'உயிரிய போராட்ட களத்தில்' படைத்தளபதிகளாக இருந்து
 'உயர்பணியாற்றும் உன்னத உள்ளங்களே' மருத்துவர்கள். 
அவர்களது கனிவான வார்த்தைகளும், கருத்தான வழிகாட்டலும் 
நோயின் தாக்கத்தை வலுவிழக்கசெய்ய்யும்.

மருத்துவர்கள் ஆற்றும் மகத்தான சேவைகளை மனமுவந்து பாராட்டுவோம். 
லூக்கா போன்ற பிரியமான மருத்துவர்களுக்காக
 ஆண்டவருக்கு மனதார நன்றி சொல்லுவோம். 
மருத்துவத் துறையில் இருக்கும் கறுப்புஆடுகள் மனம்திருந்தவும், 
மருத்துவம் வியாபாரமாகி உயிர்சேதம் தவிர்க்கப்படவும் 
மன்னவரிடம் மன்றாடுவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED