நன்றி சொல்லுவோம் !
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும்
உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக.
கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
II தெசலோனிக்கேயர் 3:16
இன்முகத்தோடு துவங்கி, இறுகிய மனதோடு நடைபோட்டு,
ஈடில்லா பலபுதிய அனுபவங்கள் நிறைந்த இந்த வருடம்,
'மறக்க முடியாத மாபெரும் விருந்தை
இனிப்பு இல்லாது நமக்கு கொடுத்திருக்கிறது'.
இதிலும், இவ்வளவு நாட்களையும் நாம் கடந்து வந்திருப்பது
'தேவகிருபையால் தான்' என்பதே நிஜம்.
இந்த வருடத்தின் இறுதிநாட்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நமக்கு,
'தேவனுடைய சமாதானம்' மட்டுமே
வரும்காலத்தை வசந்தகாலமாக அமைத்து தரும்.
உலகத்தில் எவரும் தரக்கூடாத சமாதானத்தை, சமாதானத்தின் தேவன் தாமே
நமக்கு தந்து என்றும் நம்மோடிருந்து, நம்மை தொடர்ந்து வழிநடத்துவாராக.
P.C.: Google Images

Amen
ReplyDeleteGod Bless
DeleteAmen.......
ReplyDeleteAmen
ReplyDelete