மறவாதே என் மனமே

நன்றி சொல்லுவோம் !


கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
சங்கீதம் 103:2

அடுத்த வருடத்திற்குள் அடியெடுத்து வைக்க ஆயத்தமாகி கொண்டிருக்கும் 
இந்த நாளில், நாம் கடந்துவந்த பாதைகளுக்காகவும், இந்த வருடம் முழுவதும்
 ஆண்டவர் தமது கிருபையினாலும், இரக்கத்தினாலும் 
நம்மை காத்து நடத்தியதற்காகவும், 
அவர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் தேவசமூகத்தில் அமர்ந்து 
ஆண்டவருக்கு நன்றி சொல்ல நேரம் ஒதுக்குவோம்.

நாம் அனுதினமும் இறைவனோடு நடக்கும் நெருக்கம் அதிகமாகவும்,
 நமது வாழ்வு ஆண்டவருக்கும் மக்களுக்கும் மகிழ்வுள்ளதாக அமையவும் 
இதயப்பூர்வமான தீர்மானங்களை இறைபாதத்தில் இயற்றிடுவோம். 
நிறைவாழ்வின் பாதையில், 
நாம் தொடர்ந்து நடைபோட ஆற்றலும், அருளும் பெற்றிடவும்; 
ஆண்டவரது ஆளுகையே நம்மை என்றும் நல்வழியில் நடத்திடவும் 
மனமுவந்து மன்றாடுவோம்.


புத்தாண்டு மலரட்டும்; புதுவாழ்வு துளிர்க்கட்டும்; 
இறையாசீர் நடத்தட்டும்; நிறைவாழ்வு செழிக்கட்டும்!


P.C.: Google Images

Comments

  1. Forget not my soul HIS blessings.
    ஆமென்

    ReplyDelete
  2. சுருக்கமாகவும், எளிமையாகவும், நிறைவாகவும் கருத்துக்களுக்கு நன்றி.
    ஒவ்வொரு நாளும் உற்சாகப்படுத்துகிறது. இந்த வருடம் முழுவதும் அனுப்பியதற்காக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் உங்களது வார்த்தைகளுக்காக மனமார்ந்த நன்றி.
      இறையாசீர் நம்மை தொடர்ந்து நடத்தட்டும்.

      Delete
  3. 🙂 இறைவா இந்த ஆண்டின் இறுதி நாளில் நிற்கின்றோம்... அது முற்றிலும் உமது கிருபையாலே...இதயப்பூர்வமாய் எங்களை உம்மிடம் படைக்கின்றோம்.

    இனி வரும் புது ஆண்டில் புது கிருபையால் எங்களை நடத்தும்...

    இந்த குறுஞ்செய்தி இந்த ஆண்டிலும் தொடர்ந்து வந்து ஆறுதலளித்திட, அறிவுறுத்திட வேண்டுகின்றோம்.

    இறைவா போற்றிப் போற்றி

    🙂

    ReplyDelete
    Replies
    1. உங்களது வார்த்தைகளுக்காக மனமார்ந்த நன்றி.
      இறையாசீர் நம்மை தொடர்ந்து நடத்தட்டும்.

      Delete
  4. Replies
    1. இறையாசீர் நம்மை தொடர்ந்து நடத்தட்டும் நண்பா.

      Delete
  5. ஐயா, சிறந்த வார்த்தைகளை தினமும் அனுப்புவதற்கு நன்றி.
    வரும் வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இறையாசீர் நம்மை தொடர்ந்து நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED