புதுச்சட்டை

நன்றி சொல்லுவோம் 


இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை(யோசேப்பை) அதிகமாய் 
நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
ஆதியாகமம் 37:3

இஸ்ரவேல் தன் மகன்மேலுள்ள மிகுந்த அன்பால், வண்ணமயமான 
புதிய அங்கியை பரிசாக கொடுத்து, மகனுக்கு உடுத்தி அழகுபார்க்கிறார். 
நமது தந்தையாம் இறைவன், நமக்கும் இவ்விதமே புதிய உடைகள் தருகிறார். 
உடுத்துவிக்கும் ஆண்டவருக்கு உளமார நன்றி சொல்லுவோம்.

புதிய துணி ஒன்று வாங்கும் பொழுது, 
ஏற்கனவே நம்மிடம் உள்ளதை தேவையுள்ளோருக்கு கொடுப்பது நல்லது. 
ஒரு துணிகூட ஒருவர் இல்லாதிருக்கும்பொழுது 
நம்மிடம் இரண்டு இருப்பது அதிகம் தானே. 
புதியதாகவே வாங்கிக்கொடுப்போருக்கு வந்தனங்கள்.
உடுத்துவோம் - உடுத்தக்கொடுப்போம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED