அமாவாசை நிலவு

பொழுதடையும் நேரத்துல 
அந்தி சாயும் வேலையில 
தின்னையிலையோ தெருவுலையோ 
கூட்டம் கூடி கதைபேசி 
கூட்டாஞ்சோறு சாப்பிடும்போது 
தெருவிளக்கு நமக்கு தூரமாயிருந்தா 
நிலா வெளிச்சம் தான் நம்ம கூட இருக்கும்.

P.C.: Google Images


ஆனா, அமாவாசையில மட்டும் 
நிலாவும் லீவு போட்டுரும், 
வானமும் இருட்டாயிரும். . .

அந்த நேரமெல்லாம் வெளியவந்தா
மின்மினி பூச்சி மட்டும் தான் 
கலர்கலரா டார்ச் அடிக்கும்,
பறந்து பறந்து ஒளிகொடுக்கும்.

P.C.: Google Images

ஆனா, பனிக்காலம் மட்டும் வந்தா
பறக்கும் பூச்சியும், பறந்திரும் பஞ்சா. . .

போதாகுறைக்கு பாதிநாளு, 
கரண்ட்டும் கட் ஆகிரும்,
வீட்டுலையும், வீதியிலையும் ஒளிபோயிரும் 
வெளிச்சமில்லாம எல்லாம் இருட்டாயிரும்.

இருட்டைப்போக்க வழி இருக்கா?

இருக்கே. . இதென்ன கேள்வி. . 
அழகான வழி இருக்கு,
அம்சமான தீர்விருக்கு!

இருண்ட ஊருக்கு இன்வெர்ட்டர் இருக்கு 
ஒளியை கொடுக்க ஜெனெரேட்டர் இருக்கு
இனியும் வெளிச்சம் இல்லனா கவலை எதுக்கு?

அய்யா. . . வெளிச்சம் தரும் ஒளி கேட்டா, 
இதுதான் வழியா?

கேளுங்க நியாயமாரே. . . 
இதெல்லாம் நிரந்தர தீர்வாகுமா? 
இல்ல, நிலாவுக்கு நிகராகுமா?

கொஞ்சநேரம் வெளிச்சம் வரும், 
தற்காலிக தீர்வு தரும் . அம்புட்டு தான் . . .

சரி, அதவுடுங்க !

ஊருலயாவது அமாவாசை அன்னைக்கு தான் இருட்டு.
நம்ம மனசுல . . . . . . . . . . . .?

அகமுழுக்க சிலநேரம் இருட்டா இருக்கு 
அமாவாசை வானமாட்டம் கருப்பா இருக்கு.

நாமளும் நிறைய நேரம் 
இன்வெர்ட்டர் ஜெனெரேட்டரையே நாடுறோம் 
மின்மினி பூச்சியையே தேடுறோம்.

ஆக. . . , வெளிச்சம் தேடுறோம், 
ஆனா, இருட்டில தான் வாழுறோம்.

நம்ம மனசிலுள்ள இருட்டை ஒட்டவும், 
நிரந்தர வெளிச்சம் ஏற்றவும் 
நிலையான ஒளி ஒருவர் நமக்கிருக்க 
நிம்மதியும் அவரிடம் சேர்ந்திருக்க. . . 
தலையெழுத்தா நாம் இன்னும் தனியே நிற்க?

மின்மினி பூச்சியும் வராத பனிக்காலத்துல 
மீட்பைக்கொடுக்க வந்த மெய்யான ஒளி;
இருட்டில் மட்டுமே இருந்த நமது வாழ்வில் 
ஒளிமிகு சூரியனாய் வந்த ஒப்பற்ற ஒளி;

நமக்காகவே பிறந்த மெய்யான ஒளி
இருளனைத்தும் போக்கும் நித்திய ஒளி 
அவரே, இயேசு கிறிஸ்து என்னும் மெய்யான ஒளி.
அவரிடம் சேர்வதே நிலை வாழ்வின் ஒரே வழி.

P.C.: Google Images


இயேசு கிறிஸ்து - நம்மோட 
வலியெல்லாம் தீர்க்கும் வலிநிவாரணி 
வழிகாட்டி நமை நடத்தும் மாசிலாமணி

இப்படி, நமக்கு வாழ்வளித்து நம்மை வழிநடத்தும் 
நிலையான ஒளிகிட்ட சேர்ந்துட்டோம்னா 
அமாவாசை இருட்டும் மறைஞ்சுரும் 
ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் கிடைச்சுரும்.


இத்தகு, மெய்யான ஒளியாம் இறை இயேசு
நம் வாழ்விலும் நிறைவாகட்டும்,
இறை ஒளி நம்மூலம் பிரதிபலிக்கட்டும்,
அகவிருள் நீங்கட்டும், அறிவொளி வீசட்டும்,
அருள்நாதர் இயேசு தரும் அருள்மாரி பொழியட்டும்.

இறையாசீர் நம்மை என்றும் நல்வழியிலே நடத்தட்டும்.

("அமாவாசை நிலவு" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த வரிகள், 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' மூலம் நடத்தப்படும் குறுநேர மெய்நிகர் வாராந்திர கூடுகைக்காக 15.12.2020 அன்று எழுதப்பட்டது. யாவரையும் ஊக்கப்படுத்துவதற்காக 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' எடுக்கும் இந்த முயற்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.)

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED