நன்றி சொல்லுவோம்
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 147:3
நமது மனம் எப்போதும் மகிழ்வாகவும்,
மந்தமாகவும் மாறிமாறி அலையடிக்கும்.
ஆனால், சிலவேளை இருள்சூழும் இடர்வரும்!
இடர்களால் இதயம் நொறுங்கினாலும்,
நாம் ஆண்டவரை நெருங்கநெருங்க
நமது மனம் சாந்தமாகும், காயங்கள் குணமாகும்!!
நமது இதயத்தின் காயம் கட்டி குணமாக்கும்
நல்ல ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
அதீத மனஅழுத்தத்தால் மனநிலை பாதிக்கப்பட்டு,
வாழ்நாள் முழுக்க தன்னிலை அறியாது சுற்றித்திரியும்
மனவளர்ச்சி குன்றியோருக்காக நாம் ஆண்டவரிடம் வேண்டுவோம்.
வருடம் ஒருமுறையாவது அத்தகைய இல்லங்களை சென்று சந்திப்போம்,
ஆறுதல் சொல்லுவோம், ஆண்டவரை அறிவிப்போம்!!!
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U
ReplyDelete