கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து,
. . செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.
சங்கீதம் 27:11
பயணிக்கும் பாதையில், புதிய படியில் அடியெடுத்து வைக்கிறோம்.
இறை நமபிக்கையே நங்கூரமாக நிறுத்தினால்,
இறைவன் தாமே, தமது வழியை நமக்கு போதித்து,
பயணிக்கும் பாதையை செம்மையாகவும்,
பயணத்தை நன்மையாகவும், மகிழ்ச்சியாகவும் மலரச்செய்வார்.
நமது வாழ்வின் வருடங்களில்
புதிய அத்தியாயத்தை துவங்கும் இந்நன்நாளில்,
எல்லா விதமான ஞானத்திற்காகவும்,
இறைவனது சித்தத்தை அறியும் அறிவிற்காகவும்,
அன்பு நிறை குணங்களுக்காகவும்,
நல்ல கனிதரும் வாழ்விற்காகவும்
ஆண்டவரிடம் வேண்டுதல் செய்வோம்.
இறைவனின் போதனையும், நடத்துதலும்
நமது வாழ்வில் நிறைவாய் செயல்பட்டால்,
பாதை புதியதானாலும் பயணம் இனியதாகும்.
எனவே, எல்லாம் வல்ல இறைவனே துணையாய்,
நாம் எடுத்து வைக்கும் அடியிலெல்லாம் உடனிருந்து
நம்மை அனுதினமும் அடிபிறழாமல் நடத்துவாராக!
P.C.: Google Images

மகிழ்ச்சி
ReplyDeleteபுதிய ஆண்டில் நிறைவான வாழ்த்துக்கள்.
இரண்டாம் ஆண்டின் புதிய துவக்கமும் இது. இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இறைவனின் திருப்பெயர் மாட்சியுறுவதாக
இன்னும் பல அருமையான பதிவுகள் தொடர்ந்து வெளிவருவதாக.
ஆமென்!
இறையாசீர் நம்மை தொடர்ந்து நடத்தட்டும்.
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇறையாசீர் நம்மை தொடர்ந்து நடத்தட்டும் நண்பா.
Delete