இது கர்த்தர் உண்டாக்கிய வெற்றியின் நாள்;
இதிலே களிகூர்ந்து மகிழ்ந்திருப்பிப்போம்.
சங்கீதம் 118:24
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாயிருக்கவேண்டும்
என்று சங்கீதக்காரன் நமக்கு உற்சாகமூட்டுகிறார்.
அனுதினமும் இறைவணக்கத்தை முடித்துவிட்டு இரைதேடிச் செல்லும்
நெறிநிறை காலைக்குருவிகளும், மனம்நிறை மகிழ்வாழ்வின்
வாசற்படிக்கு வழிகாட்டுகிறது, கூவியும் கூப்பிடுகிறது.
எல்லா நாளும் கர்த்தர் உண்டுபண்ணின வெற்றியின் நாள் தான்.
இதிலே நேரம் காலம் பார்த்து பொன்னான பொழுதுகளை மண்ணாக்கமால்,
ஒவ்வொரு நிமிடத்தையும் சரிவர திட்டமிடுவோம்.
திட்டங்களில் திருத்தங்களையும், இறைசித்தத்தையும் செய்திட
ஆண்டவரிடம் வேண்டிடுவோம் - வெற்றிகளால் மகிழ்ந்திடுவோம்.
ஒவ்வொரு நாளும் ஆண்டவர் படைத்தளித்ததே;
ஆண்டவர் படைத்த ஒவ்வொரு நாளும் நன்னாளே!

Amen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U Godwin
ReplyDelete